மாணவிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை

திருக்கோவிலூர், அக். 23: திருக்கோவிலூர் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு  தன்னம்பிக்கை குறித்த கருத்தரங்கம் நடந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி கலந்து கொண்டு பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடினஉழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் பாடுபட வேண்டும் என்று மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கல்வி சம்பந்தமாக மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்கள் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Tags : Principal Education Officer ,
× RELATED மது போதையில் பேருந்து இயக்குவதை...