×

சாலை விதிகளை பின்பற்ற ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

சின்னசேலம், அக். 23: சாலைவிதிகளை பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று கள்ளக்குறிச்சி போக்குவரத்து எஸ்ஐ தர்மராஜ் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.சின்னசேலம் பகுதியில் உள்ள மூங்கில்பாடி சாலை மற்றும் சேலம் மெயின்ரோட்டில் டாடா ஏசி வாகனம் உள்ளிட்டவைகளை சாலை ஓரத்திலேயே நிறுத்தி விட்டு பலமணி நேரம் அவற்றை எடுக்காமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் அறிவுரையின்பேரில் கள்ளக்குறிச்சி போக்குவரத்து சப்இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் சின்னசேலம் பஸ்நிலையத்தில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் கார், ஆட்டோ, டாடா ஏசி வாகனங்களின் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கள்ளக்குறிச்சி போக்குவரத்து எஸ்ஐ தர்மராஜ் பேசுகையில், டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மதுகுடித்து விட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. ஆட்டோ டிரைவர்கள் குற்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பொதுமக்களிடம் நண்பனாக பழக வேண்டும். குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஆட்டோ போன்ற வாகனங்களில் ஏற்ற வேண்டும்.  வாகனங்களில் ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ் காப்பி, டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும். முடிந்தவரை சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலைவிதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். வாகன ஓட்டிகள் எப்போதும் போலீசுக்கும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். இதில் வாகன ஓட்டிகளுடன், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Tags : drivers ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...