×

செஞ்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு சப் கலெக்டர் ஆய்வு

செஞ்சி, அக். 23: செஞ்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த சப் கலெக்டர் அனு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  திண்டிவனம் சப் கலெக்டர் டாக்டர் அனு செஞ்சி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சென்று புறநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண்ணிடம் காய்ச்சல் குறித்து விசாரணை செய்தார்.இந்த ஆய்வின் போது செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜீ மற்றும் மருத்துவ அலுவலர் டாக்டர் பாலகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : inspection ,Ghenji Government Hospital ,
× RELATED தஞ்சை மாவட்ட நீர்நிலைகளில்...