செஞ்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாசலில் கழிவுநீர் தேக்கம்

செஞ்சி, அக். 23: செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாசலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500 மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்தப்பள்ளியின் அருகில் வீடுகளில் வெளியேற்றும் கழிவு நீர்  செல்ல வழியில்லாததால் பள்ளி நுழைவு வாசலில் குளம் போல் தேங்கி  உள்ளது. இதனால் அங்கு டெங்கு கொசு உருவாக வாய்ப்புள்ளது. இது குறித்து பல  முறை பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: