ஆசனூர் கிராமத்தில் காட்சி பொருளான குடிநீர் தொட்டி

உளுந்தூர்பேட்டை, அக். 23:

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆசனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராஜவீதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி போதிய பராமரிப்பு இன்றி முட்புதர்கள் மண்டி கிடந்தது. இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த தொட்டியின் அருகில் இருந்த முட்செடிகள் மட்டும் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில் அந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை என அந்த தெருவை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து பழுதான மின்மோட்டாரை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: