×

விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

காட்டுமன்னார்கோவில், அக். 23:  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் செல்வகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சி அரசூர் ஆதிதிராவிட மக்கள் கறவை மாடுகள் வாங்குவதற்கென வங்கிக் கடன் கேட்டு கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரும் 5ம்தேதி குமராட்சி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ரேஷன் கடையை தினமும் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : meeting ,Agricultural Workers Union ,
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...