×

சிதம்பரம் பாலிடெக்னிக் விடுதியில் மாணவர் தூக்கு போட்டு சாவு

சிதம்பரம், அக். 23:   சீர்காழியை சேர்ந்த டிப்ளமோ மாணவர் சிதம்பரம் பாலிடெக்னிக் விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வியால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ராகுல் (17). இவர் சிதம்பரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் ராகுல் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த சகமாணவர்கள் அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் தங்கிய அறையில் காதல் கவிதை எழுதி வைத்திருந்ததால் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Tags : Student hanging ,polytechnic hotel ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை