விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்

பண்ருட்டி, அக். 23:  பண்ருட்டி அரசினர் மேனிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகமூர்த்தி தலைமை தாங்கினார். நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாட வேண்டும், பேரிடர் காலங்களில் விபத்து ஏற்பட்டால் பாதிப்படைந்தவர்களை மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் அமலி, பள்ளி ஆசிரியர்கள், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Accident Diwali Awareness Camp ,
× RELATED கடலூரில் கடைகள் அகற்றம்