×

உணவு வீணாவதை தடுக்க வேளாண் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

நீடாமங்கலம்,அக்.23: உணவு வீணாவதை தடுக்க தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி 3 மாதங்கள் கிராம வேளாண்மை பணி அனுபவங்களை முன்னோடி விவசாயிகளிடம் பெறுவதற்கும், மற்றும் மத்திய மாநில அரசின் திட்டங்களை பயிற்சி பெற தஞ்சை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புறங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு மாணவ, மாணவிகளிடம் உணவு வீணாவதை தடுப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.உணவின் முக்கியத்துவம் குறித்து காகிதத்தில் வாசகங்கள் மூலம் எழுதி மாணவர்களுக்கு கொடுத்தனர். சுற்றுச்சூழலை பாதுகாத்து சுகாதாரமாக வாழவேண்டும் என்றனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Agricultural College ,
× RELATED தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே...