×

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார்

திருவாரூர். அக். 23:  தமிழகத்தில் தற்போது காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் என்பது வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால் இந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியானது மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில் வழங்குவது மட்டுமின்றி அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கத்தினர் மூலம் பள்ளிகள் கல்லூரிகள் போன்றவற்றில் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியினை மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பாலசந்தர், கலியபெருமாள், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Pundi Kalaivanan ,schoolchildren ,
× RELATED ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய...