×

முத்துப்பேட்டை அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

முத்துப்பேட்டை,அக்.23: முத்துப்பேட்டை அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். முன்னதாக உடற்கல்வி இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார். இதில் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சித்தாமருத்துவர் பிரியதர்ஷினி பேசுகையில்,மாணவர்கள் பள்ளியில் மற்றும் வீடுகளில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், இந்த பருவமழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும்.மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நிலவேம்பு தேவைபட்டால் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவுக்கு வந்து பெற்றுக்கொள்ளாம் என்றார். அதனைதொடர்ந்து பள்ளியில் படிக்கும் சுமார் 600க்கும் மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.


Tags : dengue awareness camp ,
× RELATED கொரோனா பரவல் குறித்து கோவையில் ஆய்வு