×

செல்போன் கடையில் திருட்டு

திங்கள்சந்தை, அக்.23: திங்கள்சந்தை அருகே ஆரோக்கிய
புரம் பகுதியை சேர்ந்தவர் சபீர் அலி(28). திங்கள்சந்தை - நெய்யூர் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சபீர் அலி கடையை பூட்டி விட்டு சென்றார்.  நேற்று காலை கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த விலை உயர்ந்த 11 செல்போன்கள், உதிரி பாகங்கள், q 7500 ரொக்கப்பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து சபீர் அலி இரணியல் போலீசில் புகார் செய்தார்.

Tags :
× RELATED வீடு புகுந்து செல்போன் திருட்டு 2 பேர் கைது