மார்த்தாண்டம் அருகே கடையில் q 1.17 லட்சம் கொள்ளை

மார்த்தாண்டம், அக்.23: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை கைசாலவிளையை சேர்ந்தவர் பாலையன்(69). இவர் உண்ணாமலைக்கடை சந்திப்பில் கடை நடத்தி வருகிறார். பாலையனின் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனது மகளின் நகையை அடகு வைத்து ரூ.1.17 லட்சத்தை கடையில் வைத்து இருந்தார். நேற்று காலை பாலையன் கடைக்கு வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேஜையில் வைத்து இருந்த ரூ.1.17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து பாலையன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Tags : shop ,Marthandam ,
× RELATED சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடையை அகற்ற வேண்டும்