×

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், அக்.23 :  குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் வருவாய்த்துறை பறக்கும்படை தனி தாசில்தார் சதானந்தன், துணை தாசில்தார் அருள்லிங்கம், தனி வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஊழியர் டேவிட் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று பகல் 12 மணியளவில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் பெட்டியில் சிறு, சிறு  மூடைகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி சோதனை செய்த போது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த அரிசி மூடைகளை கைப்பற்றி, கோணம் உணவு கிடங்கில் ஒப்படைத்தனர். மொத்தம் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.  இந்த அரிசி மூடைகளை யார் கொண்டு வந்தது என்பது பற்றி பயணிகளிடம் விசாரித்துள்ளனர். ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என கூறினர். ஒருவர் மட்டும்,  பெண் ஒருவர் ஆட்டோவில் கொண்டு வந்து இறக்கியதாக கூறினார். எனவே ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தனர். ஆனால் ரேஷன் அரிசியை கொண்டு வந்தவர் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.


Tags : Kerala ,Nagercoil ,
× RELATED அரசியல் கட்சிகள் பணம் கொண்டு வருவதை...