×

பார்வதிபுரத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக். 23 : மின்வாரிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மின்வாரியம் பொது துறையாக நீடிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைந்து மின் வாரியம் ஏற்று நடத்த வேண்டும். தினக்கூலி பணிக்காலத்தை இணைத்து ஓய்வு ஊதிய திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், குமரி மாவட்ட கிளை சார்பில் பார்வதிபுரம் பொறியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஞானாசீர்வாதம் தலைமை வகித்தார்.மாநில உதவித் தலைவர் ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவித் தலைவர்கள் சுப்பிரமணிய பிள்ளை, ராமச்சந்திரன், இணைச் செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜாமணி ஆர்ப்பாட்டத்தை நிறைவு  செய்து பேசினார்.


Tags : power workers ,
× RELATED சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா என தகவல்