×

வெள்ளிச்சந்தையில் காற்றில் சாய்ந்த தேக்கு மரம் கடத்தல்

குளச்சல், அக். 23:  வெள்ளிச்சந்தை  பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(45). இவருக்கு சொந்தமான தோப்பில் நின்ற  தேக்கு மரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீசிய காற்றில் கீழே விழுந்துள்ளது. இதை அவர்  அகற்றாமல் விட்டிருந்தார். இந்த நிலையில் அந்த தேக்கு மரத்தை திடீரென  காணவில்லை. இது குறித்து புருஷோத்தமன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார்  செய்தார். அதில்  ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், வைகுண்டராஜா  மற்றும் மேற்கு  சூரப்பள்ளத்தை சேர்ந்த அனீஷ் ஆகியோர் திருடி  சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் தேக்கு மரத்தின் மதிப்பு  ரூ.15 ஆயிரம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.Tags : crossing ,
× RELATED தமிழக எல்லையான கடலூர், நாகை...