டெங்குவை முற்றிலும் தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் மதிமுகவினர் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி, அக். 23:  கோவில்பட்டியில் டெங்குவை முற்றிலும் தடுக்க வலியுறுத்தி ஆர்டிஓ அலுவலகத்தை  மதிமுகவினர் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி நகர மதிமுக சார்பில் நடந்த இப்போராட்டத்தில் நகரச் செயலாளர் பால்ராஜ் தலைமையில் திரளாகப் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் மனு  அளித்து சென்றனர். மனு விவரம்: கோவில்பட்டி எல்கைக்கு உள்பட்ட பகுதிகள் அனைத்திலும்  கழிவு நீர் மற்றும் வாறுகால், சாலைகளில் உள்ள குழிகளில் கொசுக்கள்  உற்பத்தியாகி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் என்ற அச்சத்தில்  பொதுமக்கள் இருகின்றனர். எனவே டெங்குவை முற்றிலும் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ விஜயா, உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார்.
Advertising
Advertising

இதில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்  ராமச்சந்திரன், இளைஞர் அணி நகரச் செயலாளர் லவராஜா, முத்துப்பாண்டி, ரங்கநாதன், கேசவன், நகர துணைச்செயலாளர் வனராஜா, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர்,  சரவணன், சரன்குமார், கவுதம், இந்திரன், செண்பகராஜ், மாரியப்பன், நாகராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: