விளாத்திகுளம் ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடி, அக். 23:  தூத்துக்குடி  மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிரியதர்ஷினி உத்தரவின்  பேரில், விளாத்திகுளம் வட்டாரத்தில் செயல்படும் 41 ரேஷன் கடைகளில்  அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரிசி, சீனி, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் ஆகியவற்றில் இருப்பு  குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அரிசி 33 கிலோ, சீனி 57.5 கிலோ  முறைகேடான வகையில் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ. 7850  அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து வசூலிக்க  உத்தரவிடப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: