தட்டார்மடத்தில் மது விற்றவர் கைது

சாத்தான்குளம், அக். 23: தட்டார்மடத்தில் மது விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். தட்டார்மடம்  எஸ்.ஐ. லாரன்ஸ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தட்டார்மடம்  பகுதியில்  இடையன்விளையை சேர்ந்த டேனியல் (55) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து டேனியலை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து  12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: