×

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி

சென்னை: ஒடிசா மாநிலம் மங்களாபூரை சேர்ந்தவர் பேணுதர் (48). இவருக்கு மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர், மாதவரத்தில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 19ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பேணுதர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்துவிட்டார்.
இதுகுறித்து ஏற்கனவே அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்ததன்பேரில் அவர்கள் வந்து பேணுதர் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். மேலும், சரியான சிகிச்சை அளிக்காததால் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக உடலை பதப்படுத்த ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் அங்கிருந்து சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

Tags : Stanley Government Hospital ,
× RELATED ஸ்டான்லி அரசு மருத்துவமனை நர்சுக்கு கொரோனா