டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனத்தில் ‘சுபத்சவ்’ சிறப்பு விற்பனை : நவ.28 வரை நடக்கிறது

சென்னை: இந்தியாவின் முன்னணி சமையல் அறை உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான, ‘டிடிகே பிரஸ்டீஜ்’ தனது பண்டிகை கால கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விற்பனையை ‘சுபத்சவ்’ என்ற பெயரில் அறிவித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 28ம் தேதி வரை சமையலறை உபகரணம் மற்றும் பிரஸ்டீஜ் கிளீன் ஹோம் தயாரிப்பு ஆகிய இரண்டிலும் நுகர்வோருக்கு 79% வரை பயனுள்ள நன்மைகளை வழங்குகிறது. இதுகுறித்து டிடிகே பிரஸ்டீஜை சேர்ந்த தினேஷ் கார்க் கூறுகையில், ‘டிடிகே பிரஸ்டீஜில், இந்த பண்டிகை காலத்தில் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதை உறுதி செய்கின்றோம்.

Advertising
Advertising

எங்களது வாடிக்கையாளர்கள் 3200 மதிப்புள்ள ஒமேகா டீலக்ஸ் 3 ‘நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் வாங்கும்போது 68 சதவீத மதிப்புள்ள பயன்களுடன் டீலக்ஸ் டியோ ஹார்ட் அனோடைஸ் 2 எல் பிரஷர் ஹேண்டி இலவசமாக பெற முடியும். 10,895 மதிப்பில் எட்ஜ் கிளாஸ்-டாப் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் 6720 மதிப்புள்ள இலவச தயாரிப்புகளின் தொகுப்பை பெறலாம். இவை 3 எல் எஃகு பிரஷர் குக்கர் பிளஸ் மற்றும் ஒமேகா டீலக்ஸ் நான் ஸ்டிக் ஆகியவற்றை கொண்டுள்ளது.  இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை டிடிகே பிரஸ்டீஜில் மட்டுமே பெற முடியும்’’ என்றார்.

Related Stories: