×

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

வேலூர், அக்.23: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணபரிவர்த்தனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் அறிவித்தது. இதற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதை கண்டித்து கடந்த மாதம் 26, 27ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் வங்கிகளின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வங்கிகளின் இணைப்பை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி நாடு முழுவதும் நேற்று ஏஐபிஇஏ மற்றும் பிஇஎப்ஐ வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை 147 வங்கிகளில் பணிபுரியும் 1,500 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். இதுகுறித்து வடஆற்காடு மாவட்ட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மில்டன் கூறியதாவது:

வங்கிகள் இணைப்பை கண்டித்து நேற்று எஸ்பிஐ வங்கி தவிர மற்ற அனைத்து வங்கிகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 1500 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். ஒருநாள் மட்டும் வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். இதனால் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அழைத்து பேசி போராட்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிக்கும். மத்திய அரசின் வங்கிகள் இணைப்பை கண்டித்து நேற்று முன்தினம் மாலையே வேலூர் கனரா வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bank employees ,protest ,government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...