×

வேலூர் மத்திய சிறையில் முருகன் தங்கிய அறையில் 2 சிம்கார்டுகள் பறிமுதல்

வேலூர், அக்.23: வேலூர் மத்திய சிறையில் முருகன் தங்கிய அறையில் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முருகன் அறையில் இருந்து செல்போன், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் முருகன் உயர் பாதுகாப்பு பிரிவில் 1வது பிளாக்கில் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் மத்திய சிறையில் முருகன் தங்கியிருந்த அறையில், செல்போன் நடமாட்டத்தை கண்காணிக்கும் சோதனை குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த அறையில் 2 சிம்கார்டுகள், ஒரு ஹெட்போன் இருப்பது தெரிய வந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முருகனிடம் செல்போன் பறிமுதல் செய்த வழக்கில் அவருக்கு நளினியுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : lodge ,Murugan ,Vellore Central Jail ,
× RELATED வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச...