×

டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான விசைத்தறி கூடங்கள், வீடுகளுக்கு 32 ஆயிரம் அபராதம்

பள்ளிப்பட்டு, அக். 23: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் இருந்த  விசைத்தறி கூடங்கள் மற்றும் கடைகளுக்கு  ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் டெங்கு  காய்ச்சலுக்கு பச்சிளம் குழந்தை, சிறுமி, பெண் உட்பட 5 பேர்  இறந்த நிலையில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு சுகாதாரம், துய்மை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமையில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதட்டூர்பேட்டை பஜார் தெரு, குடியானவர் தெரு,  நடுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள  வீடுகள், பள்ளி, விசைத்தறி கூடங்களில் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த ஐந்து விசைத்தறி கூடங்கள், 12 வீடுகள் கண்டறியப்பட்டு விசைத்தறி கூடங்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், வீடுகளுக்கு ரூ.500 வீதம்  என மொத்தம் ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில்  கொசு ஒழிப்பு கண்காணிப்பாளர் சந்திரசேகர், டாக்டர் மோகன் குமார், சுகாதார ஆய்வாளர் வினோபா, பேரூராட்சி அலுவலர்கள் குப்பன், ஜெயசங்கர்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.

Tags : Electricity plants ,
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்