×

திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர், அக். 23: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில்  கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில்   பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் கனகராஜ்  மேற்பார்வையில்,  செயல் அலுவலர் பிரேமா தலைமையில் டெங்கு ஒழிப்பு கண்காணிப்பு அலுவலர்கள் பாலாஜி, செந்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார், சிட்கோ மேலாளர் பாரதி, தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சங்க செயலாளர்  சக்கரபாணி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாண்டியன் ஆகியோர்களுடன் திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தொழில் நிறுவன மேலாளர்களுக்கு டெங்கு நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  சிட்கோ தொழிற்பேட்டை, திருவள்ளூர் நெடுஞ்சாலை, சுந்தரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் தெரு, சக்கிலிபாளையம், ராஜேஸ்வரி நகர், ஏ.எஸ்.ஆர் பாபா சிட்டி, ஜாகுவார் சிட்டி, வீற்றிருந்த பெருமாள் கோயில் தெரு, எம்.ஜி.ஆர் நகர் 1, 2வது தெருக்கள், குண்டுமேடு, கிராம தெரு, அம்மன் கோயில் தெரு ஆகிய தெருக்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டெங்கு கொசுப்புழுக்கள் இருந்த இடங்களின் உரிமையாளர்களுக்கு  ₹2, 500 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும் திருவள்ளூர் நெடுஞ்சாலை, ராஜேஸ்வரி நகர் மற்றும் ஏ.எஸ்.ஆர். பாபா சிட்டி ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

Tags : Dengue Awareness Advisory Meeting ,
× RELATED மீஞ்சூர் பேரூராட்சியில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்