×

விபத்தில்லா தீபாவளி கொண்டாட்டம் தீயணைப்புத் துறை வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம்

கும்மிடிப்பூண்டி, அக். 23: கும்மிடிப்பூண்டியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என தீயணைப்புத்துறை வீரர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு ரயில் நிலையம், பஸ் நிலையம், தொழிற்சாலை, பள்ளி வளாகம், குடிசை வீடுகள், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது  எளிதில் தீப்பிடிக்க கூடிய பஞ்சு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்தல் வேண்டும்.

பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகள் பட்டாசு வெடிக்கக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை சேகரித்து மீண்டும் வெடிக்க செய்யக்கூடாது. சிமினி விளக்கு, மெழுகுவத்தி உள்ளிட்ட பொருட்கள் இருக்குமிடத்தில் பட்டாசு வைக்கக்கூடாது. பாட்டில்கள் மற்றும் டப்பாக்களில் வைத்து ராக்கெட்கள் விடக்கூடாது. வாணவேடிக்கைகள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மேல் பகுதி வெடித்து அருகே உள்ள குடிசை வீடுகளுக்கு எளிதில் தீப்பிடித்து விபத்தை ஏற்படுத்தும். மருத்துவமனை, பெட்ரோல் பங்க், பட்டாசு கடைகள் இருக்கும் இடத்தில்  பட்டாசு வெடிக்க என பல்வேறு நிபந்தனைகள் கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்கி தீயணைப்புக் வீரர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றனர்.

Tags : Accident Diwali Celebration ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...