×

பெரியபாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, அக். 23: பெரியபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தொடர் மழையின் காரணமாக  சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள  எம்ஜிஆர் நகர் பகுதியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ - மாணவிகள் என  100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த, சில நாட்களாக  பெரியபாளையம் பகுதியில் பெய்து வருகிறது. எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் கால்வாய் இல்லாததால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ - மாணவிகளும் அப்பகுதி மக்களும் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து செல்கிறார்கள். இதனால் சேற்று புண் ஏற்படும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்புள்ளது. எனவே, எம்ஜிஆர் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபாளையம் எம்ஜிஆர் நகரில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது, சாலையின் ஓரங்களில் மழை நீரோ அல்லது கழிவு நீரோ செல்ல கால்வாய் அமைக்க வில்லை. இதனால், மழை பெய்தால் மழைநீர் தேங்கி நிற்கிறது.  இந்த மழை நீர்  வடிவதற்கு மூன்று நாட்கள் ஆகிறது. அதற்குள் தேங்கி நிற்கும்  மழைநீர் கழிவு நீராக மாறிவிடுகிறது. இதில், உற்பத்தியாகும் கொசுக்களால் நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே, மழைநீர் தேங்காதவாறு எம்ஜிஆர் நகரில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : rain water canal ,area ,Periyapayam MGR Nagar ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...