×

எஸ்பி அலுவலகத்தில் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அனுசரிப்பு

காஞ்சிபுரம், அக்.23:காஞ்சிபுரம் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மறைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. டிஐஜி தேன்மொழி தலைமை தாங்கினார். எஸ்பி கண்ணன் முன்னிலை வகித்தார். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில், சீனப் படையினர் கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21- தேதி அனுசரிக்கப்படுகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்பட்டது. காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள  நினைவு ஸ்தூபியில் டிஐஜி தேன்மொழி தலைமையில் எஸ்பி கண்ணன், டிஎஸ்பிக்கள் பாலசந்தர்,கலைச்செல்வன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு காவலர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க  அஞ்சலி செலுத்தினர்கள்.

Tags : office ,SP ,
× RELATED ராஜிவ்காந்தி நினைவிடத்தில்...