×

மாமல்லபுரம் பேரூராட்சியில் டெங்கு கொசு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மாமல்லபுரம், அக். 23: மாமல்லபுரம் பேரூராட்சியில் டெங்கு கொசு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாமல்லபுரம் பேரூராட்சி, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு இணைந்து,  டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தின. இந்த பேரணியை, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிறுவனர் தேவன்பு பேரணியை துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் லதா முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி தென்மாட வீதி, வெண்ணெய் உருண்டை கல் வீதி, திருக்கழுக்குன்றம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் பேரூராட்சியை வந்தடைந்தது. இதில், மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 700க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.மாணவர்கள், டெங்கு கொசு ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் செல்வக்குமார், பூங்குழலி, பழனி உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Mamallapuram ,
× RELATED ராஜஸ்தானில் 90,000 ஹெக்டேர் உள்பட...