×

சங்கு தீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு

திருக்கழுக்குன்றம், அக்.23: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்த குளம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இக்குளத்தின் நீர்வரத்து கால்வாய்களை, சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். சில இடங்களில் கால்வாய்களில் முட்செடிகளும் வளர்ந்துள்ளன. இதனால், மழை காலத்தில் சங்கு தீர்த்த குளத்தில் மழைநீர் செல்ல வழியில்லாமல், தடை ஏற்பட்டது. இதையொட்டி, சங்கு தீர்த்த குளம் நீரின்றி வரண்டு காணப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் குளத்துக்கு மழைநீர் சென்று நிரம்புவதற்கு ஏதுவாக வேதகிரீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம், சங்கு தீர்த்த குளத்தின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும்  முட்செடிகளை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். மேலும், குளத்தையும் சுத்தம் செய்து ஆழம் மற்றும் அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : water canal ,pond ,Sangu Tirtha ,
× RELATED கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள...