காவலர் வீரவணக்க நாள் இன்ஸ்பெக்டர் படத்திற்கு கமிஷனர் மரியாதை

ஆவடி: கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் கடந்த 2017ம் ஆண்டு கொள்ளையடித்த நாதுராம் தலைமையிலான கொள்ளையர்களை பிடிக்க அப்போதைய மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அப்போது,  கொள்ளையர்களை பிடிக்கும்போது பெரியபாண்டியன் குண்டு அடிபட்டு பலியானார். இந்நிலையில், காவலர் வீர வணக்கநாளை முன்னிட்டு நேற்று காலை, சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆவடி, வசந்தம் நகர், நேரு தெருவில் உள்ள பெரியபாண்டியன் இல்லத்திற்கு சென்று, அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, மகன்கள் ரூபன், ராகுல் ஆகியோரிடம் நலம் விசாரித்தார். அப்போது, கூடுதல் கமிஷனர் தினகரன், நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் டாக்டர் சுதாகர், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், ஆவடி இன்ஸ்பெக்டர் காளிராஜ் உள்பட போலீசார் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: