×

திருப்பராய்த்துறை காவிரியில் இன்று ஐப்பசி 1 ‘முதல் முழுக்கு’ விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடல் ரங்கம் பெருமாளுக்கு தங்க குடத்தில் தீர்த்தம்

திருச்சி, அக்.18: ஐப்பசி மாத பிறப்பையொட்டி இன்று திருச்சி அருகே திருப்பராய்த்துறை காவிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நீராடுகின்றனர். ரங்கம் பெருமாளுக்கு தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நிதிகளுக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. காவிரி நதியின் ராசி துலா என்பதால் ஐப்பசி மாதத்தில் தினந்தோறும் காவிரியில் நீராடி பெருமாளை சேவிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. ரங்கம் பெருமாளுக்கு 11 மாதங்களும் கொள்ளிடத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து நைவேத்தியம், நித்திய சேவைகள், தீர்த்தங்கள் வழங்கப்படும். ஆனால் துலா மாதத்தில் மட்டும் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படும்.
இன்று (18ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து காவிரிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்து வந்து பெருமாளுக்கு பூஜைகள் நடைபெறும். மேலும் துலா மாதத்தில் பெரிய பெருமாளுக்கும், நம்பெருமாளுக்கும் சாளக்கிராம மாலை சாற்றப்படுவது சிறப்பாகும். கோயில் கருட மண்டபத்தில் துலா மாதம் முழுவதும் துலா காவிரி புராணம் பாராயணம் செய்யப்படுகிறது. இன்று முதல் ஐப்பசி மாதம் முழுவதும் நாள்தோறும் நம்பெருமாளுக்கு யானை மீது தங்கக்குடத்தில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

Tags : ceremony ,Thiruparanyipuzha ,Ipasi 1 'First Dive ,
× RELATED நிவர் புயல் காரணமாக சென்னையில்...