100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை

துறையூர், அக்.18:  துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த எரகுடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தை நிறுத்தி பல நாட்கள் ஆகிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று எரகுடி ஊராட்சியை சேர்ந்த வடக்குப்பட்டி பயனாளிகள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் எங்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், 2 நாட்களில் வேலை வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு பொதுமக்கள் நாங்கள் காத்திருக்க முடியாது, உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்று கூறியதையடுத்து வேலை வழங்கப்பட்டது. இதையடுத்து 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து வேலைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: