ரயிலில் பட்டாசு எடுத்து செல்லாதீங்க... விழிப்புணர்வு ஏற்படுத்த களமிறங்கிய ஆர்பிஎப்

திருச்சி, அக்.18: தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பொதுமக்கள் பட்டாசு எடுத்துச் செல்வது வழக்கமாக நடக்கிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பட்டாசுகளால் எடுத்துச் செல்பவருக்கு மட்டுமல்ல உடன் பயணிக்கும் சக பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீஸ் சார்பில், ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் நேற்று நடந்தது. ஆர்பிஎப் கமிஷனர் மொய்தீன் உத்தரவின்பேரில், கோட்ட ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில், காரைக்கால்-எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் எஸ்ஐகள் மோகன், ராஜ்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ரயில் பயணத்தின்போது பட்டாசுகள், வெடி பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது. படிகட்டில் பயணம் செய்யக்கூடாது. ஓடும் ரயிலில் ஏறக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ரயிலில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர்.

Related Stories: