பள்ளி,கல்லூரி வாகனங்களில் கேமரா பொருத்த அறிவுறுத்தல்

சேலம், அக்.18: சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து சரகத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொ) தாமோதரன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்கள் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது. பள்ளி, கல்லூரி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும், புதிய போக்குவரத்து சட்ட திருத்தத்தின் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ₹10,000ம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹5,000ம், பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ₹10,000ம் அபராதம் விதிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் சாலை விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறுநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 24 சதவீதம் சாலை விபத்தை குறைந்துள்ளது, என்றார்.  இந்நிகழ்ச்சியில், கிழக்கு வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, 500க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: