பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கு ஆட்டோ டிரைவர் மீண்டும் சேலம் சிறையில் அடைப்பு

சேலம், அக். 18: பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் 7 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், ஆட்டோ டிரைவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் அருகேயுள்ள வேம்படிதாளம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ  டிரைவர் மோகன்ராஜ்(42), பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கொண்டலாம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட ஏழை பெண்களை மிரட்டி அவர் பலாத்காரம் செய்ததும், சில பெண்களை ஆபாசமாக வீடியோ  எடுத்து தொடர்ந்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. அவரது கூட்டாளி மணிகண்டனுடன் சேர்ந்து இந்த கொடூர வேலையை அவர் செய்து வந்துள்ளார். இதையடுத்து கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜிடம் இருந்து ஒரு செல்போனும், கூட்டாளி மணிகண்டனிடம் இருந்து 1 செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பெண்களை ஆபாசமாக மிரட்டி எடுக்கப்பட்ட காட்சிகளும்  இடம்பெற்றுள்ளது. இதனை நீதிமன்ற அனுமதியுடன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையில் 7 நாட்கள் விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆர்படுத்தினர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: