×

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

சேலம், அக்.18: சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த மாதம் திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடினர். அதில், மேட்டூர் பொன்நகர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜூ மகன் கிருஷ்ணமூர்த்தி (25), என்பவர் மாணவியை கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், மாணவியை கடந்த 2 நாட்களுக்கு முன் தேவூர் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு, கிருஷ்ணமூர்த்தி தப்பினார். அவரை நேற்று முன்தினம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மாணவியை அழைத்துச் சென்ற அவர், தனியாக ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். போலீசார் தேடுவதை அறிந்ததும், விட்டுவிட்டு தப்பியதும் தெரிந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். .

Tags :
× RELATED வாகன விபத்தில் வாலிபர் பலி