×

நடத்துனரை தாக்கிய 2 பேர் அதிரடி கைது

ஆத்தூர், அக்.18:  தலைவாசல் அருகே மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோகுலக்கண்ணன்(34). இவர், தனியார் பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சேலத்திலிருந்து ஆத்தூருக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது, பஸ்சில் இருந்த பயணி ஒருவர், அழகாபுரம் என்னுமிடத்தில் பஸ்சை நிறுத்துமாறு கேட்டுள்ளார். ஆனால், அப்பகுதியில் பஸ் நிற்காது என கூறி செல்லியம்பாளையம் என்னுமிடத்தில் அந்த பயணியை இறக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், ஆத்தூரில் இருந்து திரும்பி வந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், 4 பேர் பஸ்சுக்குள் ஏரி கோகுலக்கண்ணனை சரமாரி தாக்கியுள்ளனர்.
இதனைக்கண்டு பஸ்சில் இருந்த பயணிகள், தாக்குதலில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். உடனே 4 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் கோகுலக்கண்ணன் புகார் தெரிவித்தார். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலம்பரசன்(36), ராஜகலை(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED டிரைவர், கண்டக்டருக்கு மெமோ...