வாய்க்காலில் மூழ்கி ஓய்வு ஆசிரியர் பலி

சேலம், அக்.18: இடைப்பாடி அடுத்துள்ள தேவூர் அரசிராமணி குள்ளம்பட்டி புதுவளவு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை, குள்ளம்பட்டி கிழக்குகரை வாய்க்கால் பகுதிக்கு சென்றார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் கொண்ட அவரின் மகன் விஜயன் சென்று பார்த்துள்ளார். அப்போது, கால்வாய் கரையில் வெங்கடாசலத்தின் போர்வை இருந்தது.இதையடுத்து கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகம் கொண்டு, உறவினர்கள் உதவியுடன் உள்ளே இறங்கி தேடினார். ஆனால், வெங்கடாசலம் உடல் கிடைக்கவில்லை. இதனிடையே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குட்டையான்காடு பகுதியில் கால்வாயில் வெங்கடாசலம் சடலமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், தேவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் மற்றும் இடைப்பாடி தீயணைப்புத்துறையினர் வந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலத்தின் சடலத்தை மீட்டனர். பின்னர், உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: