மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், அக்.18: சேலம் மின் பகிர்மான வட்டம் வாழப்பாடி கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம், நாளை (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு சிங்கபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், மின்சாரம் தொடர்பான குறைகளை பொதுமக்கள் நேரடியாக வந்து தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என  செயற்பொறியாளர் பாரதி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: