வாழப்பாடி அருகே பரபரப்பு கொளுந்து விட்டு எரிந்த டிரான்ஸ்பார்மர்

வாழப்பாடி, அக்.18:  வாழப்பாடி அருகே உள்ள தமையனூர் ஊராட்சிக்குட்பட்ட வசந்தபுரி பகுதியில்,  2 டிரான்ஸ்பார்மர்கள் ஒரே இடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் மின்கசிவின் காரணமாக, ஒரு டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றியது. மேலும், அந்த டிரான்ஸ்பார்மில் ஆயில் அதிகளவில் இருந்ததால் கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  மேலும், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்தால் பழுதான டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைத்து, சீரான மின்சப்ளைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: