×

திருச்செங்கோட்டில் அதிமுக 48ம் ஆண்டு துவக்க விழா

திருச்செங்கோடு, அக்.18:  திருச்செங்கோட்டில், அதிமுகவின் 48ம் ஆண்டு  துவக்க விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சாணார்பாளையம் பகுதியிலுள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதிமுக கொடி ஏற்றப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொன்னுசாமி, நகர செயலாளர் மனோகரன், மாவட்ட துணைச்செயலாளர் முருகேசன், ஜெயலலிதா பேரவை கார்த்திகேயன், முரளிதரன், முத்துக்குமார், சேகர், முனியப்பன், வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Tiruchengode ,
× RELATED திருச்செங்கோடு நகராட்சியில் கடை வாடகையை செலுத்த 10 நாள் கெடு