×

கொல்லிமலை பாதையில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண் சடலம் மீட்பு

சேந்தமங்கலம், அக்.18: கொல்லிமலைப்பாதை 61வது கொண்டை ஊசி வளைவில், 200 அடி பள்ளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய ஆண் சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொல்லிமலைப்பாதை 61வது கொண்டை ஊசி வளைவில் உள்ள 200 அடி பள்ளத்தில், நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது. இதுகுறித்து அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து, வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த நபர் 2 மாதமாக தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் யார்? தற்கொலை செய்தாரா அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து வாழவந்தி நாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,
× RELATED கூலித்தொழிலாளி சடலம் மீட்பு