×

போதிய தண்ணீரின்றி மக்கள் அவதி மேல்நிலை தொட்டி கேட்டு பிடிஓ அலுவலகம் முற்றுகை

திருச்செங்கோடு, அக்.18: சின்ன எலச்சிபாளையத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டக்கோரி, நேற்று பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன எலச்சிபாளையம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அடுத்த பகுதிக்கு சென்று தண்ணரீ் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. தவிர, தண்ணீர் தேடி பொதுமக்கள் அலையும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தங்கள் பகுதிக்கு போதிய தண்ணீர் விநியோகிக்க, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டவேண்டும் என முடிவு செய்த பொதுமக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதனால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள், நேற்று எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவி்ட பொதுமக்கள், பிடிஓ விஜயகுமாரிடம் மனு அளித்தனர். பொதுமக்களின் இந்த திடீர் முற்றுகையால் பிடிஓ அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,PDO ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...