×

கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக். 18: நாமக்கல் பூங்கா சாலையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.
பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் வாங்கும் கடைசி மாதத்தில், சரிபாதி ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுபாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் ஏராளமான ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை விலகி கோஷமிட்டனர்

Tags : ration shop staff ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்