×

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக குறைந்தது

ஓசூர், அக்.18:  கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 488 கன அடியாக குறைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கெலவரப்பள்ளி அணை உள்ளது. இந்த அணைக்கு கர்நாடக மாநிலம் நந்திமலை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அணைக்கு 1368 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மழை குறைந்ததையடுத்து நேற்று 1368 கன அடியில் இருந்து 488 கன அடியாக சரிந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 41.66 அடியாக உள்ளது. இதில் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் 488 கன அடி தண்ணீரும் அப்படியே தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Tags : Kelavarapalli Dam ,
× RELATED கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு