×

மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி, அக்.18:  கிருஷ்ணகிரி   மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பகலில் வெயிலும், மாலை   மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை   மற்றும் இரவி ல் பரவலாக மழைபெய்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில்   நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து   கொண்டே இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தொடர்ந்து மழை பெய்து   வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை  8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: பாரூர் 2.2, தேன்கனிக்கோட்டை  5, அஞ்செட்டி 2, ஊத்தங்கரை 9.4, சூளகிரி  2, போச்சம்பள்ளி 2.4 பெய்துள்ளது.


Tags : rainfall ,district ,
× RELATED கனமழையால் கீழடி அகழாய்வு பணி நிறுத்தம்