×

ஓசூர் வாசவி நகரில் அடிப்படை வசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

ஓசூர், அக்.18: ஓசூரில் வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர் திண்ணூர் பகுதியில் உள்ள வாசவி நகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். அதில், ரேஷன் கடை முதல் வாசவி நகர் முழுவதும் சாலை அமைக்க வேண்டும், தெருவிளக்குகள் 20 சதவீதம் மட்டுமே போடப்பட்டுள்ளது. இதை 100 சதவீதம் அளவிற்கு அமைக்க வேண்டும். அனைத்து பகுதிக்கும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : city ,Hosur Vasavi ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி...