×

ஓசூரில் அதிமுக 48ம் ஆண்டு தொடக்க விழா

ஓசூர்,அக்.18: ஓசூரில் அதிமுகவின் 48ம் ஆண்டு தொடக்க விழா ஓசூர் நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாராயணன் தலைமை வகித்து ராயகோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் போது முன்னாள் நகர்மன்ற தலைவர் நஞ்சுண்டசாமி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர்கள் டைட்டான் சுரேஷ், தவமணி, அரப்ஜான், பக்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : inauguration ,AIADMK ,Hosur ,
× RELATED சென்னை கோடம்பாக்கத்தில் முதற்கட்டமாக...