×

சொசைட்டி காலனி, நெல்லி நகரில் கழிவு நீர் தேக்கத்தால் தொற்று ேநாய் அபாயம்

தர்மபுரி, அக்.18: இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சொசைட்டி காலனி மற்றும் நெல்லி நகர் குடியிருப்புகளில், சுமார் 2ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு, கால்வாய் இதுவரை அமைக்கவில்லை. இதனால் கழிவுநீர் காலி நிலங்களிலும், சாலையோரங்களிலும் தேங்கி நிற்கிறது. தற்போது பெய்து வரும் மழையால், சொசைட்டி காலனி முதல் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி, வீடுகளில் இருந்து யாரும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல், 2வது, 3வது தெருக்களுக்கும் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழைநீருடன் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், டெங்கு காய்ச்சல் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சொசைட்டி காலனி மற்றும் நெல்லி நகர் பகுதியில், முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். இங்கு சேகரமாகும் குப்பையை, தினந்தோறும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nelly ,
× RELATED மானாமதுரை வாரச்சந்தையில் சமூக...